ஓடு, ஆடு, பயிர் செய் – இவ்வாறு பல்வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி நமக்குக் கட்டளையிடும் இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஓவியங்களை “வார்லி” என்ற ஆதிகுடி சமுதாயத்தைச் சேர்ந்த ஓவியர்கள் வரைந்துள்ளனர். கோடுகள், வட்டங்கள் என்பனவற்றைக் கொண்டு பல்வேறு விதமான காட்சிகளை இவர்கள் தீட்டியுள்ளனர்.
சிறுவர்களிடம் படம் வரையும் ஆர்வத்தைத் தூண்டவும், ஆர்வமுள்ள சிறுவர்கள் தொடர்ந்து வரையவும் இந்த நூல் உதவும். தனக்கு வரையவே வராது என்று வருந்தும் குழந்தையுங்கூட இந்தப் புத்தகத்தில் காட்டப்படும் காட்சிகளை முன்மாதிரிகளாகக் கொண்டு வரைய வாய்ப்பு உள்ளது.