மனிதவுரிமை என்ற சொல் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதன் முழுப்பொருளையும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இந்நூல், மனித உரிமை என்பதை அவர்களது அன்றாட வாழ்வுடன், அனுபவங்களுடன் தொடர்புபடுத்திக் காட்டுகிறது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலகமனித உரிமை அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள 30 உரிமைகளும் இடம்பெற்றுள்ளன. உலகப் புகழ்ப் பெற்ற 29 ஓவியர்கள் இவ்வுரிமைகளைக் கண்ணையும் கருத்தையும் கவரும் ஓவியங்களாக, கற்பனையை கிளரும் படக்கதைகளாகத் தீட்டியுள்ளனர். இது அனைத்துலக பொதுமன்னிப்பு சபை என்ற சர்வதேச அமைப்பு, குழந்தைகளுக்கு புரியும் வகையில் வடிவமைத்துள்ள மனித உரிமைகள் பற்றிய ஆங்கில நூலின் தமிழாக்கமாகும்.